வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (19/07/2018)

கடைசி தொடர்பு:03:00 (19/07/2018)

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி! 

கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு 20 பேர் பலி குறித்த கட்டுரை...

கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழைக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். 

கேரளாவில் பெய்துவரும் கனமழை

கேரளாவில் தென் மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதன் காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் முற்றிலும் சாலைகள் வெள்ளத்தினால் சூழப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களிலும் நீர் சூழ்ந்து சிக்னல் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வீடுகளைச் சூழ்ந்து தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாகக் கேரளாவில் பல பகுதிகள் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. இதற்கிடையில், கேரளாவில் 8,033 குடும்பங்களைச் சேர்ந்த 34,693 பேர் 265 நிவாரண முகாம்களில்  தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த நிலையில், கடந்த ஜூலை 9-ம் தேதியில் இருந்து பெய்துவரும் கனமழையால் இதுவரை 13 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று (18-ம் தேதி) மட்டும் பெய்த கனமழையில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக கனமழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த மழை தொடர்ந்து இன்றுவரை நீடிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க