இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா? | Do you know how many sexual harassment cases have been filed in India in the last 3 years?

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (19/07/2018)

கடைசி தொடர்பு:04:00 (19/07/2018)

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா?

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 1லட்சத்து 10ஆயிரம் பாலியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் வழக்கு


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 -ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் பாலியல் தொடர்பான வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு`நாடு முழுவதும் 2014ஆம் ஆண்டில் 36ஆயிரத்து 735 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளது. 2015ஆம் ஆண்டில் 34ஆயிரத்து 651பாலியல் பலாத்கார வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 38ஆயிரத்து 947பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதே போல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக `2014ஆம் ஆண்டில் 3இலட்சத்து 39ஆயிரம் வழக்குகளும், 2015ஆம் ஆண்டில் 3இலட்சத்து 29ஆயிரம் வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 3இலட்சத்து 39ஆயிரம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக' குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கை வைத்துப்பார்க்கும் போது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1லட்சத்து 10 ஆயிரம் வழக்குகள் பாலியல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.