”எப்படி சாலையைக் கடக்கணும் தெரியுமா?” - மனிதர்களுக்குப் பாடம் எடுத்த நாய்! | Kerala dog became famous after its picture of crossing road went viral

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (19/07/2018)

கடைசி தொடர்பு:13:25 (19/07/2018)

”எப்படி சாலையைக் கடக்கணும் தெரியுமா?” - மனிதர்களுக்குப் பாடம் எடுத்த நாய்!

மனிதர்கள், தங்கள் வாழ்க்கைமுறையில் சிக்கல்கள் வராமலிருக்க, சட்டதிட்டங்களையும் சில நெறிமுறைகளையும் உருவாக்கினர். உருவாக்கிய அவர்களே அதை மீறியும் வருவது முரண்தான். ஆனால், அப்படி மனிதர்களால் உருவாக்கப்பட்ட விதிகளை மனிதர்கள் அல்லாத சில உயிரினங்களும்  சிலசமயம் பின்பற்றுவதுண்டு. அந்த வகை உயிரினங்களில் முக்கியமானது நாய். மனிதர்களின் அன்பை அதிகம்  பெறும் ஓர் உயிரினமமிதுவே. ஒரு நாய், நேற்று கேரளாவில் வைரல் ஹிட் ஆகியிருக்கிறது.

நாய்

Photo Credit - Kerala Police Twitter page

இரண்டு நாள்களுக்கு முன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் ஒரு புகைப்படம் வெளியானது. அதில் ஒரு நாய், பாதசாரிகள் சாலையைக் கடக்க உதவும் ஸீப்ரா கிராஸிங்கில் சரியாகக் கடக்கிறது. ஆனால், அதன் அருகிலேயே மனிதர்கள் அவரவர் இஷ்டத்துக்கு சாலையைக் கடக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை கேரளா போலீஸ், ட்விட்டர் பக்கத்தில் பகிர, அந்த  அறிவுள்ள நாய் பிரபலம் ஆனது.  

சில மாநில போலீஸ், இந்த மாதிரியான விஷயங்களைத் தங்களது சமூக வலைதளங்களில் சரியான நேரத்தில் பகிர்ந்து விழிப்புஉணர்வையும் சுவாரஸ்யமான முறையில் ஏற்படுத்துகிறார்கள். சென்ற மாதம், மும்பை போலீஸ் பப்ஜி விளையாட்டை வைத்து ஹெல்மெட் முக்கியத்துவம் பற்றி எழுதிய ட்வீட்டும் வைரல் ஆனது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க