குஜராத் `ராணி கி வாவ்' படத்துடன் வெளியாகும் வண்ணமயமான 100 ரூபாய் நோட்டு! 

2000, 500, 200, 50 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து நூறு ரூபாய் நோட்டும் வண்ணமயமாக உள்ளது.

100 ரூபாய் நோட்டு
 

கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்ட  விவரங்களும் முற்றிலும் மாற்றப்பட்டிருந்தன. பழைய 500 ரூபாய் நோட்டில் காந்தியின் தண்டி யாத்திரை படம் இடம்பெற்றிருக்கும். புதிய 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பிங்க் நிறத்தில் 2,000 ரூபாய் நோட்டுதான் அவற்றில் ஹைலைட். இந்த வரிசையில் 100 ரூபாய் நோட்டும் புதுப்பொலிவு பெற உள்ளது.

புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டு இளம் ஊதா நிறத்தில் இருக்கும். ரூபாய் நோட்டின் பின்புறத்தில் குஜராத்தில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ராணி ( RANI KI VAV) படிக்கல் கிணற்றின் படம் இடம்பெற்றிருக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமும், ஸ்லோகனும் இடம்பெற்றிருக்கும். புதிய 100 ரூபாய் நோட்டின் அச்சுப்பணிகள் தொடங்கிவிட்டன. புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் எனத் தெரிகிறது. நீலம், பிங்க், மஞ்சள் என வண்ண வண்ண ரூபாய் நோட்டுகளை முதலில் பயன்படுத்தும் `லக்கி’ தலைமுறை நாமாகத்தான் இருக்க முடியும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!