சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக்! 

`நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில், இன்றுமுதல் (20-ம் தேதி) ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சுங்கச்சாவடி

`நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, வருடத்துக்கு ஒருமுறை சுங்கக் கட்டணமாக நாடு முழுவதும் 18 ஆயிரம் கோடி ரூபாய் தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிப்பதோடு, ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்; லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் இன்றுமுதல் (20-ம் தேதி) ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த ஸ்டிரைக்கில் நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கப் போவதாகவும், தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் முழுவீச்சில் இருக்கும் எனவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால், மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!