``வருமான வரித் துறை கைப்பற்றும் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்'' - ஒய்வுபெற்ற நீதிபதி!

``வருமான வரித் துறை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கைப்பற்றினால், அந்தப் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்" என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளார், கறுப்புப்பண விவகாரங்களுக்கான சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஷா. 

வருமானவரி

வருமான வரித் துறை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கணக்கில் வராத பணத்தைக் கைப்பற்றிவருகிறது. இந்த நிலையில், கருப்புப்பண விவகாரங்களை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய்வு அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஷா, ``ஒரு கோடி ரூபாய்க்கும் கூடுதலாக உள்ள பணம் கைப்பற்றப்பட்டால், அந்தப் பணம் முழுமையாக அரசு கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும்" என்று அவர் மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளார். 

வருமானவரித் துறை

தனது பரிந்துரையில், ``மத்திய அரசு ரொக்கமாகக் கையிருப்பில் வைப்பதற்கான நிர்ணயித்துள்ள 20லட்சம் ரூபாய் என்பது மிகவும் குறைவானது. இதை, ஒரு கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். தற்போது உள்ள வருமான வரிச் சட்ட விதிமுறைகளின்படி, கணக்கில் காட்டாத பணத்துக்கு 40 சதவிகித வரியை அபராதமாகச் செலுத்தினால் போதும் என்று உள்ளது. இதை மாற்றி, ஒரு கோடி ரூபாய்க்கும் கூடுதலாக கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கைப்பற்றினால், அதை முழுமையாக அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்" என மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!