மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1,484 கோடி! - வெளியுறவுத் துறை தகவல்\ | Govt spent Rs 1,484 crore on flights, maintenance for PM Modi’s foreign trips

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (20/07/2018)

கடைசி தொடர்பு:13:54 (20/07/2018)

மோடியின் விமான பராமரிப்புச் செலவு ரூ.1,484 கோடி! - வெளியுறவுத் துறை தகவல்\

பிரதமரின்  வெளிநாட்டுப் பயணத்துக்கான விமான பராமரிப்புச் செலவுக்காக 1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

மோடியின் வெளிநாட்டு பயணம்

பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றார். இந்த ஆண்டு ஜூன் 10- ம் தேதி வரை அவர் 42 முறை வெளிநாடுகளுக்கு பயணம்செய்துள்ளார். கிட்டத்தட்ட 84 நாடுகளுக்கு அவர்  சென்றுவந்துள்ளார்.  பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்காக விமான பராமரிப்புச் செலவுக்கு மட்டும் ரூ.1088.42 கோடி செலவிடப்பட்டுள்ளது. தனியார் விமானங்களை வாடகைக்கு எடுத்த வகையில் ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஹாட்லைன் தொடர்புக்காக ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த  2015-16 -ம் ஆண்டில், அதிகபட்சமாக 24 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார் மோடி. 2016-17 -ம் ஆண்டில், 18 நாடுகளுக்கும் 2017-18-ம் ஆண்டில் 19 நாடுகளுக்கும் அவர் சென்றுவந்துள்ளார். 2014- ம் ஆண்டில் பிரதமராகப் பதவி ஏற்றதும், அண்டைநாடான பூடான் சென்றதுதான் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம். அவர், இன்னும் 16 நாடுகளுக்குச் சென்றுவந்தால், பதவிக் காலத்தில் 100 நாடுகளுக்குச் சென்று வந்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கே வந்துசேரும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க