`நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிரொலி...' - இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி! | Indian currency losses as it hit a record low

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (20/07/2018)

கடைசி தொடர்பு:12:26 (20/07/2018)

`நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிரொலி...' - இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்த பின், மீண்டும் இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் சரிவைக் கண்டுள்ளது. 

இந்திய ரூபாய்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் முனைப்புக்காட்டி வருகின்றன. இதன் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் வர்த்தகப் பனிப்போர் மூண்டுள்ளதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து ரூ.69.12 ஆக உள்ளது. இது, கடந்த ஜூன் 28-ம் தேதியன்று ஏற்பட்ட சரிவை முறியடித்துவிட்டதாக வர்த்தக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். 

நேற்றைய வர்த்தக நேர முடிவில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ரூ.69.05-ஆக இருந்தது. ஆனால், இன்று தொடங்கிய வர்த்தக நேரத்தில், ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த மாதம் ரூ.69.10 காசுகளாக வீழ்ச்சி அடைந்ததே அதிகபட்ச வீழ்ச்சியாகக் கருதப்பட்டது.