8-ம் வகுப்பு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தனரா? - உ.பி-யில் நிகழ்ந்த சோகம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர் போலீஸார்.

சிறுமி


உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில், முசாபர்நகர் மாவட்டத்தில் இன்று மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிறுமியின் உடலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த 19-ம் தேதியன்று காலை இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என அந்தச் சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர். பல இடங்களில் சிறுமியைத் தேடி இருக்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியைக் கண்டெடுத்தோம். அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!