வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (20/07/2018)

கடைசி தொடர்பு:19:13 (20/07/2018)

சந்தையில் முன்னேற்றம் ; தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் உயர்ந்தன - 20.07.2018

ஆசிய சந்தைகளில் காணப்பட்ட சுமாரான முன்னேற்றம் காரணமாகவும், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கெதிராக இதுவரை காணாத அளவு 69.13 என சரிந்ததால் தகவல் தொழில் நுட்பம் மற்றும் மருத்துவத் துறை பங்குகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாகவும் இந்திய பங்குச் சந்தை இன்று நல்ல லாபத்துடன் முடிந்தது.

இருப்பினும், பாராளுமன்றத்தில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், முதலீட்டளர்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டார்கள் என்று கூறலாம். 

மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 145.14 புள்ளிகள் அதாவது 0.40 சதவிகிதம் உயர்ந்து 36,496.37 என முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 53.10 புள்ளிகள் அதாவது 0.48 சதவிகிதம் முன்னேறி 11,010.20-ல் முடிவுற்றது.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

பஜாஜ் பைனான்ஸ் 8.1%
பஜாஜ் பைனான்சியல் சர்விசஸ் 5.7%
சன் பார்மா 2.75%
டெக் மஹிந்திரா 2.7%
இன்போசிஸ் 2.4%
சிப்லா 2.4%
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.2%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 1.8%
ஆக்ஸிஸ் பேங்க் 1.4%
பி.சி. ஜிவெல்லர்ஸ் 15.4%
அதானி பவர் 10.8%
ஸ்டெர்லைட் டெக்னாலாஜிஸ் 9.7%
மதர்ஸன் சுமி சிஸ்டம்ஸ் 5.7%
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 5.6%
அஜந்தா பார்மா 5.5%

விலை சரிந்த பங்குகள் :

பஜாஜ் ஆட்டோ  8.7%
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 3.2%
இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் 2.9%
பாரத் பெட்ரோலியம்  2.3%
வேதாந்தா  2.7%
ஹீரோ மோட்டோகார்ப் 2.2%
ஓ.என்.ஜி.சி   2.2%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,146 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1413 பங்குகள் விலை சரிந்தும், 137 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.