வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (21/07/2018)

கடைசி தொடர்பு:11:04 (21/07/2018)

`மகன் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை'- ராகுல் கண்சிமிட்டல் விவகாரத்தில் சபாநாயகர் காட்டம்!

ராகுல்காந்தி

பிரதமர் மோடி அரசின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம், நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தின் போது ஆணித்தரமாக கருத்துகளை எடுத்துரைத்த எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று, அவரை  கட்டியணைத்தார். பின்னர், தன் இருக்கைக்கு வந்த அவர், சக காங்கிரஸ் எம்.பி-க்களைப் பார்த்து கண்ணடித்தார். 

பிரதமரை கட்டியணைத்ததற்கும் அவையில் கண் சிமிட்டியதற்கும், அவைத் தலைவர் சுமத்ரா மகாஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''ஒவ்வொருவரும் அவைக்குள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அவைக்குள், இந்த நாட்டின் பிரதமராகவே மோடி பார்க்கப்படுவார். அவர், தனிப்பட்ட மனிதர் அல்ல. எனக்கும் ராகுல் காந்திக்கும் எந்தப் பகையும் கிடையாது. என் மகனைப் போன்றவர்தான் ராகுல் காந்தி. மகன் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை. குறிப்பாகக் கண்சிமிட்டியது எனக்குப் பிடிக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் வேண்டுமானால் தங்கள் கட்சித் தலைவரின் செயலை விரும்பலாம். எனக்கு அவரின்  செயல்பாடு  பிடிக்கவில்லை'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'அவையில் சிலர் திடீரென கட்டிப்பிடி இயக்கத்தை நடத்துகிறார்கள்' என்று குறிப்பிட்டார். 

இதற்கிடையே, பலரும் ராகுல் காந்தியின் பேச்சில் உறுதித்தன்மை இருந்ததாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.' ராகுல் காந்தியின் பேச்சு கேம் சேஞ்சிங் பேச்சு ' என்று காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க