`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு!’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் | Sanitary Napkins Now Exempt From GST

வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (21/07/2018)

கடைசி தொடர்பு:08:34 (22/07/2018)

`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு!’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள்

சானிடரி நாப்கின்களுக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வரிவிலக்கு

Photo Credit: ANI

28வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், சானிடரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் டிவி, ப்ரிட்ஜ், ஏர் கூலர் போன்ற பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஜி.எஸ்.டி விவரங்கள்

வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள்

 • சானிடரி நாப்கின்கள்
 • கல், பளிங்கு அல்லது மரத்தால் செய்யப்பட்ட தெய்வங்கள்
 • விலைமதிப்புள்ள உலோகங்கள் இல்லா ராக்கி கயிறு
 • துடைப்பத்துக்குப் பயன்படுத்தும் மூலப்பொருள்கள்
 • ரிசர்வ் வங்கி அல்லது அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் நினைவு நாணயங்கள்.
 • செறிவூட்டப்பட்ட பால்

12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி பொருள்கள்

 • கைத்தறி துணி
 • உரம் தரத்தில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் (Fertiliser grade phosphoric acid)

28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி பொருள்கள் 

 • வாஷிங் மெஷின் 
 • ஃப்ரிட்ஜ்
 • டிவி 
 • வீடியோ கேம்ஸ் 
 • வாக்கம் க்ளீனர்ஸ் 
 • ஐஸ் க்ரீம் ஃபீரிசர்
 • ஜூஸ் மிக்ஸர் 
 • கிரைண்டர் 
 • ஹேர் டிரையர் 
 • காஸ்மெடிக்ஸ்
 • வாட்டர் கூலர் 
 • வாட்டர் ஹீட்டர் 
 • லித்தியம் இரும்பு பேட்டரிகள் (Lithium-ion battery)

இறக்குமதி செய்யப்படும் யூரியா மீது ஜி.எஸ்.டி 5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.