வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (22/07/2018)

கடைசி தொடர்பு:08:17 (23/07/2018)

`வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை’ - சித்தராமையா அதிரடி!

‘அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை’ எனக் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.

சித்தராமையா

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கர்நாடக காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய சித்தராமையா, வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினரும் தங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் தேர்தலைச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள முடியும் எனக் கூறியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் அது குறித்து முழுமையாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, இது தான் தன்னுடைய கடைசி தேர்தல் என்றும் இனி வரும் எந்தத் தேர்தலிலும் தான் போட்டியிட போவதில்லை என்றும் சித்தராமையா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.