வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (22/07/2018)

கடைசி தொடர்பு:12:04 (22/07/2018)

`பசு கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்கிய விவகாரம்...!' -இதுவரை 3 பேர் கைது

ராஜஸ்தானில், பசுவைக் கடத்த முயன்றவர்கள் என்று சந்தேகித்து நேற்று முன்தினம் இரண்டு பேரைக் கொடூரமாகப் பொது மக்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 நபர்களை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் மேலும் ஒருரை இன்று கைது செய்துள்ளனர். 

பசு

Photo Credit - ANI

ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள அல்வார் பகுதியில் நேற்று முன்தினம் (20.7.2018) 2 பேர், பசுக்களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட கிராம மக்கள் பசுவைக் கடத்த முயன்றவர்கள் எனக் கருதி அவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில், சம்பவ இடத்திலேயே அக்பர் கான் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளை அடையாளம் காண தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினர்.

குலாப் சந்த் கட்டாரியாஇந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா (Gulab Chand Kataria), `இந்த தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளி நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்' என்றார். 

இந்த தாக்குதல் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரைக் கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.