`அடிக்கடி தேர்தல் நடைபெற வேண்டும்!' -ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ப.சிதம்பரம் பளீச்

தேர்தல் நேருங்கி வருவதால்தான் பொருள்களின் வரியை மத்திய அரசு குறைத்து வருகிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

ப சிதம்பரம்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் 28-வது ஜி.எஸ்.டி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. தமிழகம் சார்பில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஐ.ஜி.எஸ்.டி வரியை சரிசமமாக பிரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், `சானிடரி நாப்கின், பளிங்கு அல்லது மரத்தால் செய்யப்பட்ட தெய்வங்கள், விலைமதிப்புள்ள உலோகங்கள் இல்லா ராக்கி கயிறு, துடைப்பத்துக்குப் பயன்படுத்தும் மூலப்பொருள்கள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கைத்தறி துணி மற்றும் உரம் தரத்தில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் உள்ளிட பொருள்களுக்கு 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டது'. மேலும், ` டிவி, ப்ரிட்ஜ், ஏர் கூலர் போன்ற பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது' என செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல் தெரிவித்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில், `தேர்தல் நேருங்கி வருகிறது. அதனால்தான் பொருள்களின் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதனால், பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.ஜி.எஸ்.டி கவுன்சில் 100 பொருள்கள் மீதான வட்டி விகிதத்தை குறித்துள்ளது. காலங்கடந்த ஞானம் இது. தற்போதைய ஜி.எஸ்.டி இன்னும் சீர்திருத்தப்படவில்லை. மத்திய அரசு எங்களின் ஆலோசனையை ஏன் 2017-ல் கேட்கவில்லை. இது எல்லாவற்றையும் சரி செய்தால்தான் உண்மையான ஜி.எஸ்.டி-ஆக இருக்கும்' எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!