பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 மாத குழந்தை - 19 வயது இளைஞருக்குத் மரண தண்டனை | 19 year old gets death sentence for raping 7-month-old baby

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (22/07/2018)

கடைசி தொடர்பு:14:28 (22/07/2018)

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 மாத குழந்தை - 19 வயது இளைஞருக்குத் மரண தண்டனை

ராஜஸ்தானில் 7 மாத  குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த  19 வயது இளைஞருக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தண்டனை

ராஜஸ்தான் மாநிலம் லட்சுமண்கர் பகுதியில் வசிக்கும் தம்பதியினரின் கடந்த மே 9-ம் தேதி தங்களின் 7 மாத குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை உறவினரின் வீட்டில் இல்லை, குழந்தை எங்கே என்று கேட்டதுக்கு பக்கத்து வீட்டுப் பையன் தூக்கிச் சென்றான் என உறவினர்கள் பதிலளித்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அழுத படி குழந்தை இருந்துள்ளது. காயங்களுடன் இருந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.பின்னர் குழந்தையை தூக்கிச்சென்ற 19 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

முன்னதாக கடந்த மார்ச் மாதம், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சிறப்பு சட்டத்தை ராஜஸ்தான் அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. தற்போது இந்தச் சட்டத்தின் படி 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தை கொண்டு வந்த இரண்டாவது மாநிலம் ராஜஸ்தான். இந்தச் சட்டம் ராஜஸ்தானில் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல் முறையாக அங்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.