காஷ்மீர் கலாசாரத்தில் ஈர்ப்பு! - ஸ்ரீநகரில் 2வது முறையாகத் திருமணம் செய்துகொண்ட போலந்து தம்பதி

போலந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் காஷ்மீர் மாநிலத்தின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, இங்கு வந்து மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

காஷ்மீர்

Photo Credit: ANI

ஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்த தம்பதிகளான பாட்டா மற்றும் வ்லோடெக் காஷ்மீரின் கலாசாரத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஸ்ரீநகரில் வந்து மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் நதிக்கரையில் நேற்று நடைபெற்ற இவர்களின் திருமண நிகழ்ச்சியில், மணமக்கள் இருவரும் காஷ்மீர் கலாசார உடையணிந்திருந்தனர். 

இது குறித்து பேசிய பாட்டா, “காஷ்மீரின் கலாசாரம், உணவு மற்றும் இங்குள்ள பள்ளத்தாக்குகள் எங்களை மிகவும் கவர்ந்தது. இதனால் கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் இங்கு வந்து செல்கிறோம். காஷ்மீரின் கலாசாரப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனத் தீர்மானித்து, இரண்டாவது முறையாக எங்கள் திருமணத்தை நடத்துகிறோம். நாங்கள் பார்ப்பதற்கு காஷ்மீரி போல் காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த உடையைத் தீர்மானித்தோம். காஷ்மீரில் உள்ள அனைத்தும் எங்களை மிகவும் ஈர்த்துள்ளது” எனக் கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!