வெளியிடப்பட்ட நேரம்: 22:13 (22/07/2018)

கடைசி தொடர்பு:22:13 (22/07/2018)

சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்..! இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு; கேரளா முதலிடம்

இந்திய நாட்டில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. கேரளா முதல் இடம் பிடித்துள்ளது.

பொது நிர்வாகம், ஆட்சி திறன் உள்ளிட்டவை குறித்து பொது விவகாரங்களுக்கான மையம் என்ற அமைப்பு ஆராய்ச்சி செய்துவருகின்றது. கர்நாடகாவிலிருந்து செயல்படும் இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. மின்சாரம், சாலை, குடிநீர், வீடு போன்ற வசதிகள் மக்களுக்கு எந்த அளவிற்கு உள்ளது என்ற புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில் 2018-ம் ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தை கேரளா பெற்றுள்ளது. அடுத்தடுத்த வரிசையில் தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடைசி இடங்களில் உள்ளன. இந்த மாநிலங்களில் சமூக பொருளாதாரத்தில் அதிக ஏற்றத் தாழ்வுகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.