வெளியிடப்பட்ட நேரம்: 07:19 (23/07/2018)

கடைசி தொடர்பு:19:02 (23/07/2018)

யர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..!

2015-ம் ஆண்டு நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு யர்சாகும்பாவைப் பறிக்க சென்ற நிகழ்வும் நிகழ்ந்திருக்கிறது.

யர்சாகும்பா... தங்கத்தைவிட அதிக விலை... ஊரே மலையேறுகிறது..!

ரு பொருள் அதிகமாக விலைபோகிறது என்று தெரிந்தால் யாருக்குத்தான் அதைத் தேட மனம் வராது? அதுவும் சர்வதேச சந்தையில் அப்பொருளுக்குத் தடை இல்லையென்று சொன்னால் கேட்கவா வேண்டும். அதைத்தேடி குடும்பத்துடன் மக்கள் கூட்டமாக கிளம்புகிறார்கள். அந்தப் பொருளின் பெயர் யர்சாகும்பா. பாரம்பர்ய, மருத்துவகுணம் கொண்ட பொருள்களுக்கு சந்தையிலிருக்கும் கிராக்கியைவிட இதற்கு கடும் கிராக்கி இருக்கிறது. இன்றைய தேதியில் யர்சாகும்பா தங்கத்தைவிட அதிக விலை மதிப்பு கொண்டது. 

யாசர்கும்பா

Photo - MavCure.Com

யர்சாகும்பா என்பது ஒருவகை காளான் குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். ‘இமயமலை வயாகரா’ என்றும் இதனை அழைக்கின்றனர். சீனா தவிர, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கொரியா, மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளின் சர்வதேச சந்தைகளில் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. நேபாளம், பூடான், இந்தியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள இமயமலைத் தொடரில்தான் யர்சாகும்பா காணப்படும். இமயமலைத் தொடரில் 3,300 அடி முதல் 4,000 அடிவரை உள்ள பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்படும். மழைக்காலத்துக்குப் பின்னர் ஃபங்கஸ் எனும் பூஞ்சை தாக்கத்தால் இறந்துபோகும் கம்பளிப்பூச்சியிலிருந்து யர்சாகும்பா உருவாகிறது. இறந்துபோகும் கம்பளிப்பூச்சிமேல் வெப்பம் பரவும்போது யர்சாகும்பா வெளிவரத் துவங்கும். அந்தநேரத்தில் இதைப் பறித்துவிட வேண்டும். இல்லையெனில் மழைக்காலத்தில் முற்றிலுமாக நீங்கிவிடும். யர்சாகும்பாவைப் பறிக்கும் கதைதான் கொஞ்சம் சுவாரஸ்யமானது. 

இந்தக் காளானைத் தேடி நேபாளம், இந்தியா, பூடான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். இமயமலையின் உயரமான இடங்களில் குழுவாக சில மாதங்கள் தங்கி சேகரித்து வருகின்றனர். நாம் நினைப்பதுபோல இவை எளிதில் கிடைக்காது. இவை அரிதாக முளைத்திருக்கும் ஒரு காளான்.  இதை அறுவடை செய்ய மக்கள் குடும்பத்துடன் மலைக்குக் கிளம்பி விடுகிறார்கள். யர்சாகும்பா வசந்த காலத்தில் மட்டுமே வளரும்.

யர்சாகும்பா

Photo - www.chinadialogue.net

இக்காளான் பறிப்புக்காகவே வசந்தகாலத்தில் நேபாளத்தில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகின்றன. அப்போது மாணவர்கள் யாரும் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். இதுதவிர, மாணவர்களைப் போலவே ஆசிரியர்களும் யர்சாகும்பாவைப் பறிக்கச் செல்வதால் பள்ளிகள் மூடப்படுகின்றன. 2015-ம் ஆண்டு நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு யர்சாகும்பாவைப் பறிக்கச் சென்ற நிகழ்வும் நிகழ்ந்திருக்கிறது. காளானைப் பறிக்கச் செல்லும் ஒவ்வொரு மாணவனும் 1 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டுகிறார், என்பது கூடுதல் தகவல். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் குறைந்தபட்சம் 4 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் பார்த்துவிடுகிறார்கள். அதற்கு மேல் வருமானம் பார்க்கும் குடும்பங்களும் உண்டு. சிறுவர்கள் வேகமாக ஏறி இறங்க முடியும் என்பதால்தான் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை யர்சாகும்பா பறிப்புக்கு அழைத்துச் செல்கிறார்கள். 

யர்சாகும்பா தாவரமானது புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய் ஆகியவற்றுக்கு மருந்தாகச் செயல்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், ஆண்மையை அதிகரிக்கவும் உதவும். இதை இறக்குமதி செய்வதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதன்மூலம் அதிக மருந்துகள் தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள். நல்ல ஆரோக்கியமான ஒரு நபர் 0.3 – 0.7 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். மூன்று நாள்களுக்கு ஒருமுறை இதை எடுத்துக்கொள்வது நன்மை தரும். தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது உடலுக்கு கேடு தரும். ஒரு கிலோ  நேபாளத்தில் 30 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை ஆகிறது. இதன் அதிகமான அறுவடையாலும், பருவகால மாற்றத்தாலும் உற்பத்தி குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்