வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (23/07/2018)

கடைசி தொடர்பு:12:45 (23/07/2018)

`நாங்க மது தயாரிக்கல; பொருள்கள்தான் விற்கிறோம்'- விளம்பரதாரரை தெறிக்கவிட்ட மதுவிலக்கு கமிஷனர்

ன்லைனில் விற்பனைக்கு வந்த மது தயாரிக்கும் உபகரணங்களுக்கு கேரள மாநில மதுவிலக்கு கமிஷனர் புக் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மது

இணையதளங்களில் மது தயாரிக்கும் உபகரணங்கள் விற்பனைக்கு வந்துள்ளது குறித்து கேரள மாநில மதுவிலக்கு கமிஷனர் ருஷிராஜ் சிங் கவனத்துக்கு வந்துள்ளது. இது குறித்த விளம்பரத்தை யூடியூப் இணையதளத்தில் பார்த்திருக்கிறார் கமிஷனர் ருஷிராஜ் சிங். அதில், மது தயாரிக்கும் உபகரணங்களின் விலை ரூ.24,000 என்றும், ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படும் எனவும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மது தயாரிக்கும் உபகரணங்களை வாங்குவதற்காக ஆன்லைனில் புக் செய்தார் கமிஷனர். புக் செய்ததற்கான விவரம் மொபைலில் எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறது. எஸ்.எம்.எஸ் வந்த எண்ணை, கமிஷனர் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது பேசிய நபர் பொருள்களை டெலிவரி செய்யும் சர்வீஸ்மட்டும் செய்வதாகவும் மது தயாரிக்கும் பொருள் விற்பனைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஏஜென்சியை தொடர்புகொண்டபோது மது தயாரிக்கும் உபகரணங்கள் கேரளத்தில் விற்பனை செய்வதில்லை எனக் கூறியதுடன், விளம்பரத்தையும் நீக்கியுள்ளார்கள். மேலும், பல வெளிநாட்டு இணையதளங்களில் மது தயாரிக்கும் பொருள்கள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கேரளத்தில் யாராவது மது தயாரிக்கும் உபகரணங்கள் ஆன்லைனில் வாங்கியுள்ளார்களா என்பது குறித்தும் சைபர் க்ரைம் உதவியுடன் மதுவிலக்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.