வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (24/07/2018)

கடைசி தொடர்பு:08:49 (24/07/2018)

``படிப்பு ஃபஸ்ட், அரசியல் நெக்ஸ்ட்” -கேரள கவர்னர் சதாசிவம் அட்வைஸ்!

மாணவர்கள் முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படிப்பு பூர்த்தியான பிறகு அரசியல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாம் எனக் கேரள கவர்னர் சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார்.

சதாசிவம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மாணவர் அமைப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் எஸ்.எஃப்.ஐ நிர்வாகி அபிமன்யூ கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதில் மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார். இந்தச் சம்பவம் அனைத்துத் தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேரள மாநில கவர்னர் சதாசிவம் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.  "மாணவர்கள் முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படிப்பு பூர்த்தியான பிறகு அரசியல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தலாம். மஹாராஜாஸ் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் வருந்தத்தக்கது. கல்லூரிகளுக்குள் அரசியலை அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்தக் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்" என்றார்.