வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (24/07/2018)

கடைசி தொடர்பு:08:20 (24/07/2018)

`இந்தியாவில் இருக்க அனுமதியுங்கள்' - எல்லைத்தாண்டிய பாக்., சிறுவனின் கோரிக்கை!

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய சிறுவன் இந்தியாவை விட்டுப் போக மனமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா

Photo Credit: ANI

பாகிஸ்தானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அஸ்ஃபக் அலி (Ashfaq Ali). இவர் கடந்த ஆண்டு சர்வேத எல்லையைத் தாண்டிய குற்றத்துக்காக ரஜூரி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். முதலில் ராணுவத்துக்குச் சவால் அளித்தவர் பின்னர் அவர்களின் எச்சரிக்கையை அடுத்து சரணடைந்தார். கடந்த 14 மாதங்களாக சிறையில் இருந்தவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். வாகா எல்லையில் இவரை நேற்று விடுக்கும்போது இந்தியாவை விட்டு பாகிஸ்தான் செல்வதற்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அஸ்ஃபக் அலி, ``நான் தவறுதலாக சர்வதேச எல்லையைத் தாண்டிவிட்டேன் அதனால் கைது செய்யப்பட்டேன். கடந்த 14 மாதங்களாக நான் இங்கு இருக்கிறேன். எனக்கு திரும்பிச் செல்ல விருப்பமில்லை. இந்தியா மிகவும் அருமையாக உள்ளது. என்னால் இங்கு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள முடியும். இந்திய அரசாங்கம் என்னை இங்கு அனுமதிக்க விரும்புகிறேன்” என்றார்.