ஒடிசாவில் தூய்மைப் பணியில் இணைந்த சமத்துவம்! - குவியும் பாராட்டு

ஒடிசா மாநிலத்தில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இணைந்து தெருக்களை சுத்தம் செய்துள்ளனர். 

ஒடிஷாவில் தூய்மை பணி

ஒடிசா மாநிலம் பாரிபாடாவில் பூரி ஜெகன்நாதர் ஆலயத் திருவிழா மிகவும் பிரபலம். இத்திருவிழாவில் ஏரளாமானோர் கலந்துகொள்வர். இந்த ஆண்டுக்கான திருவிழா பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில், திருவிழாவின் ஒரு பகுதியாக ``பகுடா யாத்ரா" என்ற பெயரில் தேர்திரும்பும் வைபவம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். இதற்காக தெருக்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமிய இளைஞர்களும் சுத்தம் செய்தனர். தேர் செல்லும் பகுதிகளில் இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமியர்களும் சுத்தப்பணியை மேற்கொண்டனர். இந்தத் தகவல் மற்றும் புகைப்படம் வெளியாகி வைரலாகியது. 

இதுகுறித்துப் பேசிய அப்பகுதி வாசிகள், ``சுத்தம் செய்வதற்கு மதம் தேவையில்லை. அதனால்தான் நாங்கள் ஒன்றுகூடி இதைச் செய்கிறோம். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.  மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவே இதுபோன்ற பணிகளை மேற்கொள்கிறோம். எங்கள் நகரத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் " என்றனர்.  தூய்மைப் பணிக்காக இணைந்த சமத்துவத்தை வலைதளவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!