ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த இளைஞர்! | ‘Indian rescue mission’ in Karnataka

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (24/07/2018)

கடைசி தொடர்பு:11:40 (24/07/2018)

ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த இளைஞர்!

மீபத்தில் தாய்லாந்தில் குகையில் சிக்கிய சிறுவர்களை பல்வேறு நாட்டைச் சேர்ந்த டைவிங் வீரர்கள் இணைந்து பல நாள்கள் போராடி  உயிருடன் மீட்டார்கள். உலகம் முழுக்க இந்த மீட்புப்பணிக்கு பாராட்டு குவிந்தது. 'இந்தியாவில் இதேபோன்று யாராவது குகைக்குள் சிக்கியிருந்தால்  இறந்திருப்பார்கள்' என்கிற பேச்சும் அடிபடாமல் இல்லை. மனித உயிர்களை மட்டுமல்லாமல் பிற உயிரினங்களுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் இளைஞர்கள் இந்தியாவில் நிறைந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆடு ஒன்றை இளைஞர்கள் கூட்டம் மீட்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.  

இந்தியன்

வீடியோவில் ஆடு ஒன்று குழிக்குள் விழுந்துள்ளது. குழியைச் சுற்றி சில இளைஞர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவரை தலைகீழாக குழிக்குள் இறக்குகின்றனர். மேலே இருந்து சிலர் அவரின் கால்களைப் பிடித்துக்கொண்டனர். இந்த காட்சியைப் பார்க்கும்போதே 'ஐயோ... அந்த இளைஞருக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது' என்று மனம் பதை பதைக்கிறது. குழிக்குள் சென்ற இளைஞர் ஆட்டுக்குட்டியின் காதைப் பிடித்த பின், தன்னை மேலே தூக்குமாறு கூறுகிறார்.

 

 

மேலே இளைஞர் இழுக்கப்பட ஆட்டுக்குட்டியும் வெளியே வந்தது. ஆட்டுக்குட்டி மீட்புப்பணி வெற்றிக்கரமாக முடிய, சிரிப்பும் கும்மாளமுமாக இளைஞர் கூட்டம் கலைகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் `இது இந்தியன் ஸ்டைல் மீட்புப்பணி' என்று குறிப்பிட்டுள்ளனர். ஆட்டுக்குட்டிக்காக தன் உயிரைப் பணயம் வைத்த இளைஞருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. ' தாய்லாந்து மீட்புப்பணிக்கு சற்றும் குறைவில்லாத தரமான பணி 'என்று இளைஞர்களுக்கு வாழ்த்து குவிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close