உறுப்பினர் போட்ட செய்தியால் சிறையில் இருக்கும் வாட்ஸ்அப் அட்மின்!

வாட்ஸ்அப் குரூப்பில் உறுப்பினர் பகிர்ந்த தகவலால் குரூப் அட்மின் கடந்த 5 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

வாட்ஸ் அப்

மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கார்க் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுனைத் மேவ் என்ற இளைஞர் யாரா செய்த தவறுக்காக கடந்த 5 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார். வாட்ஸ்அப்பில் உள்ள ஒரு குரூப்பில் ஜூனைத் மேவ் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அந்தக் குரூப்பில் உள்ள 17 வயது சிறுவன் ஒருவன் தேச விரோதச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இதற்கு அந்தக் குரூப்பில் உள்ள மற்ற உறுப்பினர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், சிலர் அந்தக் குரூப்பிலிருந்து வெளியேறிவிட்டனர்.

அந்தப் பதிவால் ஆத்திரமடைந்த சிலர் அந்தக் குறிப்பிட்ட நபர் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அந்தக் குரூப்பில் இருந்த சில அட்மின்கள் வெளியேறிவிட்டனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அட்மினாக உள்ள ஜூனைத் மேவ்  மற்றும் அந்தச் சிறுவன் இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து பேசிய காவல்துறையினர் புகார் வந்த சமயத்தில் ஜூனைத் மேவ் குரூப் அட்மினாக இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்கு, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய ஜூனைத்தின் உறவினர், ``அவர் அந்த குரூப்பில் உறுப்பினராகதான் இருந்தார். அவர் அட்மின் இல்லை. இந்த விவகாரம் நடைபெற்ற வேளையில் குடும்ப நிகழ்ச்சியில் அவர் இருந்தார். அதில் அட்மினாக இருந்தவர்கள் விலகியதையடுத்து மூப்பு அடிப்படையில் வாட்ஸ் அப் நெறிமுறைப்படி இவர் அட்மினாக்கப்பட்டுள்ளார். அந்தப்பதிவு வந்தபோது இவர் அட்மினாக இல்லை. இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டதாகவும். முதலமைச்சரின் தனிப்பிரிவின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!