பெண் சாமியாரின் ஃபேஸ்புக் பதிவால் போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

பெண் சாமியாரின் ஃபேஸ்புக் பதிவால் டெல்லி காவல்துறை அதிகாரியின் வேலைப் பறிபோய்விட்டது. 

பெண் சாமியார்
 

டெல்லியில் உள்ள ஜானக்புரி என்னும் பகுதியின் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் இந்தர்பால். இவர் கடந்த வாரம் நமீதா ஆச்சர்யா என்னும் பெண் சாமியாரிடம் அருள் பெற சென்றிருக்கிறார். அங்கு இந்தர்பாலின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக, நமிதா அவரின் தலைக்கு மசாஜ் செய்துள்ளார். மசாஜ் செய்ததோடு விடாமல் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நமீதா. சீருடையில் உள்ள போலீஸ் அதிகாரிக்கு பெண் சாமியார் மசாஜ் செய்ய, அவர் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துவிட்டனர். புகைப்படத்தை ட்விட்டர் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பகிர்ந்து டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். இந்தர்பாலின் வேலை பறிபோய்விட்டது. 

டெல்லி போலீஸ் அதிகாரிகள் பெண் சாமியார் விவகாரத்தில் சிக்குவது புதிதல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் சாமியார் ராதே மா டெல்லியின் விவேக் விஹார் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து காவலர்களுக்கு அருள் வழங்கிய புகைப்படம் சர்ச்சையைக் கிளப்பியது. காவல் அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது நமீதா என்னும் பெண் சாமியாரால் மற்றுமொரு டெல்லி போலீஸ் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!