ராஜஸ்தானில் பசுவின் கோமியத்துக்கு மவுசு: லிட்டர் 30 ரூபாய்க்கு விற்பனை

மாட்டு கோமியத்தை விற்பனை செய்வதன் மூலம் ராஜஸ்தான் விவசாயிகள் கூடுதல் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

விற்பனை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைலேஷ் குஜ்ஜார். பால் வியாபாரம் செய்து வந்தவர் தற்போது மாட்டுக் கோமியத்தையும் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் 30 சதவிகிதம் அதிகமாக வருமானத்தை ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளார். மாட்டுக் கோமியத்தை இயற்கை விவசாயம் செய்பவர்கள் வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய கைலேஷ், ``இரவெல்லாம் விழித்துக்கொண்டிருப்பேன். கோமியம் தரையில் விழுந்திடாமல் பார்த்துக்கொள்வேன். பசு எங்கள் தாய். அதனால் நள்ளிரவில் விழித்துக்கொண்டிருப்பது குறித்து எதுவும் நினைப்பதில்லை'' என்கிறார். மேலும், மாட்டுக் கோமியத்தை 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பதாக தெரிவித்துள்ளார். இயற்கை விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சிலர் தங்களது வீட்டு விசேஷங்களின்போது சில சடங்குகளுக்காக இதை வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்துப் பேசிய மகாராஷ்ட்ராவில் உள்ள அரசு விவசாயப் பல்கலைக்கழக முதல்வர், இயற்கை வேளாண் திட்டத்துக்கு மாதத்துக்கு 300 முதல் 500 லிட்டர் கோமியம் பல்கலைக்கழகத்துக்குத் தேவைப்படுவதாகக் கூறினார். இதற்காக மாதம் 15,000 முதல் 20,000 ரூபாய் செலவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மாட்டுக் கோமியம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!