வெள்ளச்சேதம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு நேர்ந்த துயரம்!

வெள்ளச்சேதம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கிப் பலியான சோகச் சம்பவம் கேரளத்தில் நடந்துள்ளது.

வெள்ளச்சேதம்குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கிப் பலியான சோகச் சம்பவம் கேரளத்தில் நடந்துள்ளது.

செய்தியாளர் சஜி

கேரள மாநிலம் கோட்டயத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாகச் செய்தி சேகரிக்க மாத்ருபூமி செய்தி நிறுவன நிருபர்கள் ஸ்ரீதரன்(28), சஜி (46), கேமராமேன் அபிலாஷ் (26) மற்றும் டிரைவர் பிபின்பாபு (27) ஆகியோர் நேற்று முன்தினம் படகில். சென்றிருந்தனர். அபிலாஷ் படகை ஓட்டினார். மூவாற்றுபுழை அருகில் முண்டாறு பகுதியில் செய்தி சேகரித்துவிட்டு படகில் திரும்பினர். அப்போது ஆற்றில் ஏற்பட்ட சுழியில் சிக்கி படகு கவிழ்ந்தது. அனைவரும் வெள்ளத்தில் விழுந்தனர். படகை ஓட்டிய அபிலாஷ் 4 பேரையும் காப்பாற்ற முயன்றிருக்கிறார். அதில் ஸ்ரீதரன் மற்றும் அபிலாஷ் ஆகியோர் மீட்கப்பட்டனர். சஜி மற்றும் பிபின்பாபு வெள்ளத்தில் மூழ்கி மாயமானார்கள். உடனடியாக பொதுமக்கள் தண்ணீரில் இறங்கித் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடற்படை வீரர்கள், தீயணைப்புப் படையினர் தேடுதலை தொடர்ந்து இன்று காலை சஜியின் உடல் மீட்கப்பட்டது. மாலையில் பிபின்பாபு உடல் மீட்கப்பட்டது. செய்தியாளர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!