ஒரே இடத்தில் செயல்படும் 114 நிறுவனங்கள்..! விசாரணையின்போது அதிர்ந்த அதிகாரிகள்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரெய்டில், ஒரே ரூமில் 114 நிறுவனங்கள் செயல்பட்டுவந்தது தெரியவந்துள்ளது. இது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டிஜிட்டல் குற்றங்கள்

ஹைதராபாத்திலுள்ள ஃபார்ட்டியூன் மோனார்க் மாலின் முதல் தளத்திலுள்ள அறையில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். சோதனை நடத்தியவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்தத் தளத்திலுள்ள ஒரு அறையில் நடத்திய சோதனையில், அந்தச் சிறிய அறையில் 114 நிறுவனங்கள் செயல்பட்டுவருவது தெரியவந்துள்ளது. அந்த அறையில் அனைத்து நிறுவனங்களுக்குரிய பேலன்ஸ் ஷீட், இயக்குநர்கள், அவர்களுடைய சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியுள்ளன.

அதில் செயல்படும் நிறுவனங்களில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஷெல் கம்பெனீஸ் என்று  அழைக்கப்படும் செயல்படாத நிறுவனங்கள். அதில், பல நிறுவனங்கள் 8 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளன. அதில், ஒரு நபர், 25 முதல் 30 நிறுவனங்களுக்கு இயக்குநராக உள்ளார். இந்தியச் சட்டப்படி, ஒரு நபர் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இயக்குநராக இருக்க முடியாது. ஒரே இடத்தில் 114 நிறுவனங்கள் செயல்பட்டுவருவது அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!