ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண்..! கண்ணிமைக்கும் நேரத்தில் களமிறங்கிய காவலர்

மும்பையில், மின்சார ரயிலிலிருந்து தவறிவிழுந்த பெண் ஒருவரை ரயில்வே போலீஸார் காப்பாற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Brave Officer

மும்பைப் பகுதியில் உள்ள கஞ்சுமார்க் (Kanujmarg) நகரில், மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம்  அதிகமாக இருக்கும். இந்த நிலையில், அதிகக் கூட்டத்துடன் வந்த மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர் நிலைதடுமாறி நடைமேடையில் விழுந்து ரயிலில் சிக்கிக்கொண்டார். அவரை, ரயில் இழுத்துச் சென்றது. அதைப் பார்த்த, அருகில் இருந்த ரயில்வே காவலர் ஒருவர், அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றார். ஆனால், ரயில் வேகமாக சென்றதால் நிலைதடுமாறி அந்தக் காவலரும் கீழே விழுந்துவிட்டார். அந்தப் பெண்ணின் கால், ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையில் சிக்கிக்கொண்டது. சிறிதுதூரம் அந்தப் பெண்ணை ரயில் இழுத்துச் சென்றநிலையில், பெண் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பினார். இந்தக் காட்சி சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. 

இதனிடையே, அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்த ஆர்.பி.எப் வீரர் ராஜ்கமல் யாதவுக்கு ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!