16 மாதங்களில் 75 மாவட்டங்கள்..! மோடியைப் போன்று சாதனைபடைத்த யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

யோகி ஆதியநாத்
 

யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராகக் கடந்த  ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றார்.  அந்த நாள் முதல் புதிய புதிய நடைமுறைகளை உ.பி-யில் செயல்படுத்திவருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி-யில் 75 மாவட்டங்கள் உள்ளன. பதவியேற்று 17 மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், 75 மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி முடித்துவிட்டார் யோகி.

உ.பி அரசியல் வரலாற்றில் இவ்வளவு குறைந்த காலகட்டத்தில்,  75 மாவட்டங்களையும் இதுவரை முதல்வராக இருந்த எந்தத் தலைவரும் ஆய்வு நடத்தி முடித்தது கிடையாது. யோகி பதவியேற்ற தினமே, மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தப்போவதாக அறிவித்தார். அதன்படியே, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று, அரசின் திட்டங்கள் ஒழுங்காகச் செயல்படுகிறதா? மாவட்டத்தின் சட்டம் ஒழுங்காக உள்ளனவா போன்றவற்றை ஆய்வுசெய்துள்ளார். ஆதித்யநாத்தின் இந்தப் புதிய சாதனைகுறித்து, அவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

யோகி ஆதியநாத்


‘16 மாதங்களில் 75 மாவட்டங்களை ஆய்வு நடத்தி முடித்திருக்கிறேன். இதுவரை எந்த முதல்வரும் செய்திராத சாதனை இது’ என்று பெருமிதத்துடன் பேட்டியளித்திருக்கிறார் யோகி.

பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசிட் அடித்து சாதனை படைத்துள்ளார். மோடி வெளிநாட்டுக்குச் சென்று செய்துள்ள சாதனையை யோகி ஆதித்யநாத் உள்நாட்டில் நிகழ்த்திவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!