உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்ட தமிழக அரசு!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற 5,388 கோடி ரூபாயை உடனே வழங்குமாறு மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

எஸ்.பி.வேலுமணி

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்துறை அமைச்சர் தங்கமணி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆகியோர் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.

அப்போது மத்திய அமைச்சரிடம், எஸ்.பி.வேலுமணி மனு ஒன்றை அளித்தார். அதில் ``தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வார்டு வரையறை செய்யும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இது ஏற்கெனவே மத்திய அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் தவணைத்தொகை அளிக்கப்பட வேண்டும். மக்களுக்குத்தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி தேவைப்படுகிறது. எனவே, மத்திய அரசு தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியான 5,387 கோடியே 99 லட்சம் ரூபாயை உடனே வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!