பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு! சி.பி.ஐ விசாரணைக்கு நிதிஷ் குமார் பரிந்துரை

பீகார் அரசு காப்பகத்தில், சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பரிந்துரை செய்துள்ளார். 

நிதிஷ் குமார் காப்பகம்

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில், அரசு நிதியில் செயல்படும் காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 44 பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடந்தது. இந்தச் சோதனையில், 29 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, காப்பகத்தில் பெண் ஒருவர் சித்ரவதை செய்யப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டார் எனவும் காப்பக வளாகத்துக்குள் அவரது உடல் புதைக்கப்பட்டதாகவும், பெண் ஒருவர் கொடுத்த புகாரில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதைத்ததாகச் சொல்லப்பட்ட இடத்தைத் தோண்டியதில்  எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர் போலீஸார். இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

இதற்கிடையில், கடந்த 24-ம் தேதி மக்களவையில் நடந்த விவாதத்தில், இந்த விவகாரம்குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, `இது தொடர்பாக மாநில அரசு கோரிக்கை விடுத்தால், மத்திய அரசு அதைப் பரிசீலனை செய்யத் தாயார்' என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் நிதிஷ் குமார், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!