வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (27/07/2018)

கடைசி தொடர்பு:07:25 (27/07/2018)

நான் நினைத்தால் ஒரு நிமிடத்தில் முதல்வராகிவிடுவேன்..! ஹேமமாலினி நம்பிக்கை

'நான் விருப்பப்பட்டால், ஒரு நிமிடத்தில் முதலமைச்சராகிவிடுவேன். ஆனால், அந்தப் பதவிமீது எனக்கு விருப்பம் இல்லை' என்று நடிகையும் பா.ஜ.க எம்.பி-யுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார். 

ஹேமமாலினி

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். அவர், தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியின் எம்.பி-யாக இருந்துவருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, 'முதலமைச்சராக வேண்டும் என்று நான் விருப்பப்பட்டால், ஒரு நிமிடத்தில் முதலமைச்சராகிவிடுவேன். ஆனால், அந்தப் பதவியின்மீது எனக்கு விருப்பம் இல்லை. முதலமைச்சரானால், என்னுடைய சுதந்திரம் போய்விடும். பாலிவுட்டில் நடிகையாகத்தான் இன்றும் நான் அறியப்படுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள், பெண்கள், ஏழைகள் முன்னேற்றத்துக்காக உழைத்துவருகிறார். அவரைப்போல ஒரு பிரதமரைப் பார்ப்பது கடினம்' என்று தெரிவித்தார்.