`கடவுள் என்னை அழைக்கிறார்' -தனக்காக சமாதி கட்டியவரின் பதில் இது!  | an andhra pradesh based 70 years old man built a grave

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (27/07/2018)

கடைசி தொடர்பு:17:30 (27/07/2018)

`கடவுள் என்னை அழைக்கிறார்' -தனக்காக சமாதி கட்டியவரின் பதில் இது! 

ஆந்திராவில், 70 வயது முதியவர் ஒருவர் தனக்கென பிரத்யேகமான ஒரு சமாதியைக் கட்டியுள்ளார். `உயிருடன் இருக்கும்போதே தன்னை சமாதியில் வைத்துப் புதைத்துவிடுங்கள்' என ஆட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவால் திக்குமுக்காடி விட்டனர் போலீஸார்.  

சமாதி

ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த லாச்சி ரெட்டி என்பவர், தன் நிலத்தின் ஒரு பகுதியில் தனக்காக ஒரு சாமாதியைக் கட்டியிருக்கிறார். ஆன்மிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட லாச்சி குடும்பத்தினரிடமிருந்து, கடந்த சில நாள்களாக பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார்.  

இந்நிலையில், `கடவுள் என்னை அழைக்கிறார். அதனால், இவ்வுலகை விட்டு வெளியேற விரும்புகிறேன். உயிருடன் இருக்கும்போதே தான் கட்டியுள்ள சமாதியில் தன்னைப் புதைக்க வேண்டும்' என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதையடுத்து, அவரது இடத்துக்கு விரைந்து சென்ற உள்ளூர் போலீஸார், லாச்சி ரெட்டிக்கும் அவரது மகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர்.  அதன் பிறகே, தன் முடிவை கைவிட்டுள்ளார் லாச்சி ரெட்டி. இவர், கல்லறையில் உள்ளே சென்று உட்காரும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.