பிறவிப் போராளி கருணாநிதி - பினராயி விஜயன் ட்வீட்! #Karunanidhi | Kalaignar M Karunanidhi is a born fighter - Pinarayi Vijayan

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (28/07/2018)

கடைசி தொடர்பு:17:15 (28/07/2018)

பிறவிப் போராளி கருணாநிதி - பினராயி விஜயன் ட்வீட்! #Karunanidhi

`பிறவிப் போராளி தி.மு.க தலைவர் கருணாநிதி, விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார்' என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட்

தி.மு.க தலைவர் கருணாநிதி, நேற்று நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலைகுறித்து விசாரிக்க, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். அதேபோல, திரையுலகைச் சேர்ந்தவர்களும், அரசியல் விமர்சகர்களும் கருணாநிதியின் உடல்நிலைகுறித்து அறிந்துகொள்ள காலை முதலே மருத்துவமனைக்கு வந்துசென்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவருக்கு மருத்துவ உதவிகள் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க தலைவரின் உடல்நிலைகுறித்து  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது கட்டுரையில், `பிறவிப் போராளியான கருணாநிதி, விரைவில் முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார்; அவர் விரைந்து நலம் பெற வேண்டும்' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காவிரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரித்தார்.