வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (29/07/2018)

கடைசி தொடர்பு:18:00 (29/07/2018)

`மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்' - நடிகை கங்கனா ரணாவத் விருப்பம்!

2019-ம் ஆண்டு தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நடிகை கங்கனா ரணாவத் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகை

தேசிய விருது பெற்றவர் பிரபல பாலிவுட்  நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்த இவர், ஜெயம் ரவி நடித்த `தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்திருந்தாலும், தனக்கென தனி   ரசிகர்களை தமிழ் சினிமாவில்  ஏற்படுத்திக்கொண்டவர் கங்கனா. நடிப்பில் பிஸியான இவர், தற்போது ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று  மும்பையில், பிரதமர் நரேந்திர மோடியின் சிறுவயது வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு எடுக்கப்பட்ட சலோ ஜேட்டீ ஹெய்ன் (Chalo Jeete Hain) குறும்படம் திரையிடப்பட்டது. இதில் கங்கனா ரணாவத் கலந்துகொண்டார். அப்போது  செய்தியாளர்களிடம் பேசிய அவர், `ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. பின்தங்கிய நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்ல பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 ஆண்டுகள் போதாது. ஆகவே வருகின்ற 2019-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்ற பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும். கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தவர் மோடி, பிற கட்சிகளைப் போல குடும்ப பின்னணியிலிருந்து வரவில்லை' என்றும் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். மேலும் `` சரியான நேரம் வரும் போது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் ஈடுபடத் தயார்' என கங்கனா கூறியுள்ளார்.