1 மணி நேரத்துக்கு 4 வாகனங்கள் திருட்டு - டெல்லியின் அவலம்

டெல்லியில் ஒரு மணிநேரத்துக்கு நான்கு வாகனங்கள் திருடப்படுவதாக அம்மாநில காவல்துறை சார்பில் புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

வாகனங்கள்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் நான்கு வாகனங்கள் வீதம் திருடப்படுவதாக அம்மாநில காவல்துறை சார்பில் புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம் ஜூன் 30-ம் தேதி வரை வாகன திருட்டு என்ற பிரிவில் மொத்தம் 21,298 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில் 12,689 வழக்குகள் இருசக்கர வாகனங்கள் திருட்டு என்றும் 3,871 வழக்குகள் கார்கள் திருட்டு மற்றும் 3,237 ஸ்கூட்டி திருட்டு எனப் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய காவல் துறை அதிகாரிகள், ‘ பெரும்பாலும் நகை கொள்ளை, திருட்டு ஆகிய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் இது போன்ற திருட்டு வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். ஒருவேளைத் திருடப்பட்ட வாகனங்களின் பதிவு எண்கள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தால் அதை கண்டுபிடிப்பது மிக கடினம்’ எனக் கூறியுள்ளனர். 

கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 40,972 வாகனங்கள் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. 2016-ம் வருடம் 38,644 வழக்குகள் பதிவாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!