வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (30/07/2018)

கடைசி தொடர்பு:08:00 (30/07/2018)

பா.ஜ.க பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமைப் புகார்!

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

இளம்பெண்
Photo Credit: ANI

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பா.ஜ.க பிரமுகர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். காசி கிராமத்தைச் சேர்ந்த அந்தப்பெண் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், பா.ஜ.க பிரமுகர் விக்கியின் கார் ஓட்டுநர் ஜெய்ப் (Jaib) ஃபேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார். ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானதும் நட்புடன் பழகி வந்தார். இந்நிலையில், திடீரென ஒரு நாள் திருமணம் ஆகி விட்டால் நாம் இருவரும் பேசிக்கொள்ள முடியாது. எனவே, நாம் சந்தித்துப் பேசலாமா என்றார். இதையடுத்து நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் சந்திக்கலாம் என்றேன். சம்பவத்தன்று ஜெய்ப் மற்றும் விக்கி இருவரும் காருக்கு அருகில் நின்றிருந்தனர். இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதைப் பருகியவுடன் நான் சுயநினைவை இழந்துவிட்டேன். இதையடுத்து இருவரும் காரில் ஹரித்வாருக்கு கடத்திச் சென்றனர். சுயநினைவு இழந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன். அடுத்த நாள் தேஜாகிரி ( Tejagiri) பகுதியில் விடப்பட்டேன். எனக் கூறியுள்ளார். இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க பிரமுகர் விக்கி பேசுகையில், அவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தன் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் தன் அரசியல் எதிரிகள் இந்தப் பெண்ணை தனக்கு எதிராக செயல்பட வைக்கின்றனர் எனத் தெரிவித்தார்.