வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (30/07/2018)

கடைசி தொடர்பு:11:51 (30/07/2018)

`மனைவி, மகனை கொன்றுவிட்டேன்'- தம்பிக்கு தகவலை தெரிவித்துவிட்டு உயிரைமாய்க்க முயன்றவர் கைது

ஹரியானாவில் மனைவி மற்றும் குழந்தையைக் கொடூரமான முறையில் கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது


ஹரியானா மாநிலம் ஹரிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷர்வன் குமார். இவருக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் துருவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கணவன்- மனைவி இருவருக்கும் இடையே நேற்று கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷர்வன் குமார் சுத்தியலைக் கொண்டு மனைவியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தனது 4 வயது மகனையும் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். இருவரையும் கொலை செய்தது குறித்து அதே பகுதியில் வசிக்கும் தனது சகோதரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்கொலை செய்துகொள்வதற்காக ஷர்வன் குமார் ரயில்வே தண்டவாளம்  இருந்த பகுதியை நோக்கி ஓடியுள்ளார். கொலை குறித்த தகவல் கிராமத்தில் பரவ, ஊர்மக்கள் அவரை துரத்திப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக அவரின் சகோதர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.