`என்னிடம் பயிற்சிபெறும் மாணவிகளிடம் கேட்டுப்பாருங்கள்'- பாலியல் புகாருக்கு ஆளான பயிற்சியாளர்

`தடகளப் பயிற்சியின்போது பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் உண்மை இல்லை' என்று விளக்கம் அளித்துள்ளார் பயிற்சியாளர் நிபான் தாஸ்.

ஹிமா தாஸ்

Photo Credit -facebook/nipon das

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் சரித்திர சாதனை படைத்தார். 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இதன் மூலம், ஐ.ஏ.ஏ.எஃப் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். இவருக்குப் பயிற்சி அளித்தவர்தான் நிபான் தாஸ். 

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு தடகள வீராங்கனை, பயிற்சியின்போது தன்னிடம் நிபான் தாஸ் தவறுதலாக நடக்க முயற்சி செய்தார் என்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கவுகாத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, புகார் அளித்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கை வந்தபிறகு, நிபான் தாஸ் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதியானால் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் நிபான் தாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ``என் மீது சுமத்தப்பட்ட குற்றம் பொய்யானது. குற்றம் சுமத்திய பெண் தொடர்ந்து என்னிடம் பயிற்சிக்கு வந்துள்ளார். நான் குற்றவாளி என்றால் நிச்சயம் தண்டிக்கப்படுவேன். ஆனால், என்மீது சுமத்தியக் குற்றம் நிரூபிக்கப்படவில்லையெனில் அவர் தண்டிக்கப்படுவார். நான் சுத்தமானவன்; நான் அப்பாவி. என்னிடம் பயிற்சி பெறும் மாணவிகளிடம் கேட்டுப்பாருங்கள். விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் போலீஸார் என்னிடம் கேட்டுக்கொண்டனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!