`பெற்றோர்களைக் கவனிக்கத் தவறினால் சம்பளம் பிடித்தம்!' - அசாம் அரசு அதிரடி | 10% Salary Cut For Govt Employees Who Do Not Look After Parents assam govt order

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (30/07/2018)

கடைசி தொடர்பு:16:00 (30/07/2018)

`பெற்றோர்களைக் கவனிக்கத் தவறினால் சம்பளம் பிடித்தம்!' - அசாம் அரசு அதிரடி

பெற்றோர்கள் மாற்றுத் திறனாளிகளைக் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

பெற்றோர்

வயதான பெற்றோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், அசாம் மாநில அரசு ஓர் அதிரடி சட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி பெற்றோர்களை வீட்டில் வைத்து கவனிக்காமல் அவர்களை விடுதிகளில் விடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என்றும் மேலும், மாற்றுத்திறனாளி சிறுவர்களைக் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்தச் சட்டம் வரும் காந்தி ஜயந்தியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. 

உடல்நிலை முடியாதவர்களைக் கவனித்துக்கொள்வது ஒவ்வொருவரின் கடமை. அதிலும் பெற்றோர்களைக் கவனிக்கத் தவறினால் அது பெரும் குற்றம். எனவே, பெற்றோர்களைக் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது என அம்மாநில அமைச்சர் ஹிமானந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.