வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (30/07/2018)

கடைசி தொடர்பு:17:45 (30/07/2018)

மேலும் உயர்ந்தது சந்தை! 30.07.2018

இன்று காலை ஒரு பாசிட்டிவான தொடக்கத்துக்குப் பின், சற்று தடுமாறி சரிந்தபோதிலும் விரைவிலேயே சுதாரித்து மீண்டும் முன்னேறிய இந்திய பங்குச்சந்தை, தொடர்ந்து ஆறாவது நாளாகப் புதிய உச்சத்தில் முடிவுற்றது.

உற்சாகமூட்டக்கூடியதாக அமைந்துவிட்ட காலாண்டு நிதி அறிக்கைகள் மற்றும் தணிந்து வரும் வர்த்தக யுத்தம் பற்றிய கவலை, முதலீட்டாளர்களைத் தொடர்ந்து பங்குகளை வாங்கத் தூண்டியது எனலாம்.

குறியீடுகளில் அதிக வெயிட்டேஜ் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கவுன்டர்களில் பங்குகளை வாங்குவதற்கு காணப்பட்ட ஆர்வமும் அதைத் தொடர்ந்து அப்பங்குகளின் விலை உயர்வும் சந்தையின் ஏறுமுகத்துக்கு ஒரு முக்கிய காரணம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை நன்கு அமைந்தது. அப்பங்கின் மதிப்பை உயர்த்தியது. நிபுணர்களின் பரிந்துரை பாசிட்டிவ் ஆக இருந்ததால் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கு முன்னேறியது.

இந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ், ஜப்பானின் மத்திய வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து தம்முடைய மானிட்டரி பாலிசி அறிக்கைகளை வெளியிட இருப்பதால், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் முதலீட்டாளர்கள் ஒரு தயக்க நிலையில் செயல்பட்டனர்.

இன்று விலை அதிகரித்த பங்குகள் :

பார்தி ஏர்டெல் 5.1%
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் 4.75%
ஸ்டேட் பேங்க் 3.75%
அல்ட்ராடெக் சிமெண்ட் 2.7%
ஆக்ஸிஸ் பேங்க் 2.7%
மஹிந்திரா & மஹிந்திரா 2.6%
வேதாந்தா 2.3%
சாத்பவ் இன்ப்ரா 18.5%
டெக்ஸ்மாக்கோ ரெயில் 13%
ஜெனரல் இன்சூரன்ஸ் 12.7%
அதானி பவர் 11%
GATI 10.1%
பேங்க் ஆஃப் பரோடா 10%
பாரத் எர்த் ம்,மூவர்ஸ் 9.1%
ஐ.டி.டி.சி 8.2%
பி.சி. ஜிவெல்லர்ஸ் 7.4% 
ஆந்திர பேங்க் 6.7%

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1615 பங்குகள் லாபத்துடன் முடிந்தன. 1038 பங்குகள் விலை சரிந்தும் 193 பங்குகள் முந்தைய தினத்தின் விலைகளிலிருந்து மாற்றமில்லாமலும் முடிந்தன.