ரபேல் போர் விமான ஊழல் - பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதாக ராகுல் குற்றச்சாட்டு!

ரபேல் போர் விமான ஊழல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுவருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசின்மீது வைத்தார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், 'பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார்' என்று குற்றம் சாட்டினார். மேலும், ரபேல் போர் விமானங்களைப் பராமரிக்கும் மோடியின் நண்பருக்கு, கோடிக்கணக்கில் பணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில்,  ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசின்மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், `ரபேல் போர் விமானம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு, 'பின் வாங்குங்கள் இல்லையெனில் விளைவை சந்திக்கவேண்டியிருக்கும்' என உச்ச தலைவரின் கைப்பாவைகளிடமிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது. தைரியமாகச் செயல்படும் சில பத்திரிகையாளர்களால் நான் மிகவும் பெருமையடைகிறேன். அவர்கள் மேலும், உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். 'மிஸ்டர்  56 இஞ்ச்'சுக்கு எதிராக நிற்க வேண்டும்' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!