கேரள மாநிலப் பா.ஜ.க தலைவராக ஸ்ரீதரன் பிள்ளை நியமிக்கப்பட்டார்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கேரள மாநிலப் பா.ஜ.க தலைவராக ஸ்ரீதரன்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கேரள மாநிலப் பா.ஜ.க தலைவராக ஸ்ரீதரன்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீதரன் பிள்ளை

கேரள மாநிலப் பா.ஜ.க தலைவராக இருந்த கும்மனம் ராஜசேகரன் மிசோரம் மாநிலக் கவர்னராகக் கடந்த மே மாதம் 29-ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, கேரள மாநிலப் பா.ஜ.க தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மீண்டும் கேரள மாநிலப் பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீதரன் பிள்ளை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலப் பா.ஜ.க தலைவராக இருந்தார். அதன் பிறகு தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த அவர், இப்போது மீண்டும் கேரள மாநிலப் பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான ஸ்ரீதரன் பிள்ளை 100 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 100 வது புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!