`எங்களுக்கு ஆதரவான உங்கள் குரல் எங்கே..?’ ராகுல் காந்திக்கு இமாம் கடிதம் | Imam of Jama Masjid letter to Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (30/07/2018)

கடைசி தொடர்பு:21:20 (30/07/2018)

`எங்களுக்கு ஆதரவான உங்கள் குரல் எங்கே..?’ ராகுல் காந்திக்கு இமாம் கடிதம்

இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்படும் தற்போதைய மத்திய அரசுக்கு எதிராக எழ வேண்டிய உங்கள் குரல் எங்கே என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, டெல்லி ஜமா மசூதி தலைமை இமாம் புஹாரி கடிதம் எழுதியுள்ளார். 

ராகுல் காந்தி

டெல்லி ஜமா மசூதியின் தலைமை இமாம் அஹமது புஹாரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றுடன் ஒப்பிடும்போது, தற்போது இஸ்லாமியர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதுவரையில் 64 அப்பாவி இஸ்லாமியர்கள் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது அரசு எங்களை (இஸ்லாமியர்களை) கையாளும் விதத்துக்கு எதிரான உங்களது குரல் எங்கே. இஸ்லாமியர்களுக்கான அடையாளமாக அறியப்படும் தொப்பி மற்றும் தாடியுடன் இஸ்லாமிய இளைஞர்கள் வெளியில் செல்வது சவாலான விஷயமாக உள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, நீங்கள் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றுள்ளது.