இன்று விசாரணைக்கு ஆஜராகிறாரா விஜய் மல்லையா? | Vijay Mallya To Return To UK Court For Extradition Hearing today

வெளியிடப்பட்ட நேரம்: 04:12 (31/07/2018)

கடைசி தொடர்பு:10:41 (31/07/2018)

இன்று விசாரணைக்கு ஆஜராகிறாரா விஜய் மல்லையா?

மதுபான ஆலைகளின் அதிபரான விஜய் மல்லையா, தனது மதுபான நிறுவனம் மற்றும் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்காக, இந்தியாவிலுள்ள 17 வங்கிகளில் வாங்கிய கடன்தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடி வரை திருப்பிச் செலுத்தவேண்டியிருக்கிறது. இந்நிலையில், அவர் கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பி லண்டனில் தலைமறைவாக வாழ்ந்துவருகிறார். அவர்மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சொத்துகளை முடக்கினர். மேலும், அவரை இந்தியாவுக்குக் கொண்டுவர சட்ட ரீதியாகப் பல நடவடிக்கைகளை சி.பி.ஐ மேற்கொண்டுவருகிறது.  

மல்லையா

அவரை கைதுசெய்யும்படி மும்பை மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் உத்தரவிட்டு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் மல்லையாவைக் கைதுசெய்து லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் சிபிஐ தரப்பில் நிறைய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதலில் ஆவணங்களை ஏற்க மறுத்த நீதிபதி, பின்னர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற அந்த வழக்கில், வங்கியின் நடைமுறைகளை மீறி, மல்லையாவுக்கு கடனை அளித்த வங்கிகளையும் நீதிபதி கண்டித்தார். 

இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதில் ஆஜராவதற்காக, வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்துக்கு மல்லையா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விசாரணையின் முடிவில், மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதுகுறித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.