`பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும்' - இம்ரானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ள இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மோடி - இம்ரான் கான்

பாகிஸ்தானில், கடந்த  25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி, பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தம் 272 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், இம்ரான் கானின் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதையடுத்து, பெரும்பான்மை இல்லாத போதும் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உள்ளார். அடுத்த மாதம் 11-ம் தேதி, அவர் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி தொலைபேசிமூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும், பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும் என நம்புவதாகவும், இரு நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் வளர்ச்சிகுறித்து இம்ரானிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!