திருநங்கைகளை `மற்றவர்கள்' என்று கூறிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் மேனகா காந்தி!

திருநங்கைகளை `மற்றவர்கள்' கூறிய விவகாரத்தில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கோரியுள்ளார். 

மேனகா காந்தி

பாடப் புத்தகங்களில் மனிதக் கடத்தல் தடுப்பு குறித்த தகவல்களைச் சேர்ப்பதுகுறித்து கடந்த வியாழக்கிழமை மக்களவையில் பேசினார், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி. அப்போது, திருநங்கைகளை `மற்றவர்கள்' என்ற வார்த்தையைக் கூறி அவர் அழைத்தார். இதற்கு மற்ற எம்.பி-க்கள் மேஜையைத் தட்டி சிரித்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து திருநங்கைகள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி அமைப்பின்  உறுப்பினரும், திருநங்கையுமான மீரா சங்கமித்ரா உள்ளிட்ட திருநங்கைகள் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், மத்திய அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறினர். 

விவகாரம் பூதாகரமானதை அடுத்து, நேற்று மக்களவையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கோரினார். மேலும், 'திருநங்கைகளை ஏளனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் `மற்றவர்கள்' வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு உண்டான அதிகாரபூர்வ பெயர் தெரியாததால்தான் அவ்வாறு கூறினேன். இனி அனைத்து அதிகாரபூர்வ செயல்களுக்கும் டிரான்ஸ்ஜென்டர் வார்த்தை பயன்படுத்தப்படும்" என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!