வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (31/07/2018)

கடைசி தொடர்பு:18:15 (31/07/2018)

ஆம்புலன்ஸ் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை 12 கி.மீ. தூக்கிச் சென்ற அவலம்!

ஆந்திர மாநிலத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற அவலம் நேர்ந்துள்ளது.

கர்ப்பிணி

ஆந்திர மாநிலம் விஜயநகரம் பழங்குடிகள் வாழும் பகுதியாகும். இப்பகுதிகளில் முறையான சாலை வசதிகள் கிடையாது. இப்பகுதியைச் சேர்ந்த ஜிந்தம்மா (Jindamma) என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லவதற்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மூங்கில் குச்சிகளை ஸ்ட்ரெச்சராகப் பயன்படுத்தி கர்ப்பிணிப் பெண்ணை அவரின் கணவர் மற்றும் உறவினர்கள் சுமந்து வந்துள்ளனர். அவர்களுடன் கிராம மக்கள் சிலரும் பின் தொடர்ந்து மாறி மாறி அந்தப்பெண்ணை சுமந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்தப்பெண்ணுக்கு வலி அதிகமாகியுள்ளது. நடுவழியிலேயே அந்தப்பெண் பிரசவித்துள்ளார். ஆம்புலன்ஸ் உதவி கிடைப்பதற்குள் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், அரசியல் கட்சிகள் பழங்குடி மக்களை கவனிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார். அதிகாரத்தில் உள்ள அரசுகள் உள்கட்டமைப்பை வழங்க தவறிவிட்டன என்று கூறியுள்ளார்.